தெள்ளை

ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோவில்

 ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் திருக்கோவில்  

watch video                                                             Read English


 

வேலூர் மாவட்டம், புதுவசூர் என்ற இடத்தில் இந்த திருக்கோவில் இயற்கை எழிலோடு காட்சியளிக்கிறது. 

தோற்றம்;

முருகப்பெருமாள் வள்ளிமலையில் இருந்து திருத்தணி சென்று திருமணம் செய்துக்கொண்டார். அப்போது இங்கு வந்து சென்றதாக ஐதீகம். இங்கு எப்போதும்  தண்ணீர் வத்தாமல் இருப்பதால் தீர்த்தகிரி என்று அழைக்கப்படுகிறது. ஔவையாருக்கு சுட்ட பழம் வேணுமா சுடாதபழம் வேணுமா என்று கெட்டத்தலம் இது.    


இங்கு வள்ளி, தெய்வானையுடன் முருகர் காட்சியளிக்கிறார், இத்தலத்தின் சிறப்பு என்னவென்றால் வள்ளி முருகரைவிட உயரமாக இருப்பதே ஆகும். மேலும் இக்கோவில் வடக்கே இயற்கை எழில் மிகுந்த மலையும் தெற்கே நகரத்தின் கட்சிகளும் கொண்டு அமைந்திருப்பது தனி சிறப்பாகும். 


  இக்கோவிலுக்கு வருவதற்கு முன்பே கோவிலின் நுழைவுவாயிலின் முன்பாக விநாயகரோடு ஸ்பதகன்னிகள் அமைந்தது இருக்கின்றன.

வழி

வேளூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 8km தொலைவில் புதுவசூர் அமைந்துள்ளது அங்குள்ள மலைதான் தீர்த்த மலை.

Comments