- Get link
- X
- Other Apps
தூதுவேளை
Read Englsh
சிறகாக உடைந்த முள்ளுள்ள இலைகளையும் ஊதாநிறப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்களையும் சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்தத் தண்டினையும் உடைய ஏறு கொடி. தூதுவளை தூதுளம் தூதுளை என்று குறிப்பிடப் பெறும். தமிழகமெங்கும் தன்னிச்சையாய் வளர்கிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பதுமுண்டு. வேர் முதல் பழம் வரை எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயனுடையவை இதன் பயனைக் கீழ்கண்ட வள்ளலார் வாக்கால் அறியலாம்.
"அரிவை விளக்குவதற்கும் கவனசக்தி உண்டு பண்ணுவதற்கும் கரணம் ஓய்வதற்கும் கபத்தை அரிப்பதற்கும் யோக்கியத்தையுடைய ஒளஷதி தூதுவளை தேகக் கெடுதியாகிய அசத்தம் நீங்கி தேகம் வலிவுள்ளதாக நெடுநாளைக்கு இருக்கும். முக்தி அடைவதற்குச் சகாயமாயிருக்கும். மகான்களிடத்தில் அனந்த தாலம் கருத்திருந்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையயையும் அனுபவத்தையும் அவர்கள் வெளிட்டார்கள்.''
இலை கோழையகற்றும் உடல் தேற்றிக் காமம் பேருக்கும். பூ உடலுரமூட்டும் காமம் பேருக்கும். காய் கோழையகற்றிப் பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும் . பழம் கோழையகற்றும்.
1. இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ குழம்பாகக் கடைந்தோ சாப்பிடக் கபக் கட்டு நீ க்கி உடல் பலமும் அறிவுத் தெளியும் உண்டாகும்.
2. இலைச்சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை, மாலை ஒரு தேக்கரண்டிச் சாப்பிட்டு வர என்புருக்கிக் காசம், மார்புச்சளி நீங்கும் .
3. காயை உலர்த்தித் தயிர் , உப்பு ஆகியவற்றில் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உண்டுவரப் பயித்தியம், இதய பலவீனம், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.
4. சமூலத்தை ( வேர் , இலை , பூ , காய் ) 50 கிராம், அரை லிட்டர் நீரில் போடடு 4 லில் ஒன்றாகக் காய்ச்சி காலை, மாலை பருகி வர இரைப்பு , சுவாசகசச் சளி, இருமல் ஆகியவை தீரும் .
5. ஆஸ்துமா மூச்சுத்திணறலில் பழத்தூளைப் புகைப்பிடிக்கச் சளி இளகி குணப்பபடும்.
6. நாள்தோறும் 10 பூவைக் காய்ச்சிப் பால், சக்கரைக் கூட்டி 1 மண்டலம் ( 45 நாள்கள் ) பருக உடல் பலம், முகவசீகரம், அழகும் பெறலாம் .
7. தூதுவளை, கண்டங்கத்திரி , பற்பாடகம் , விஷ்ணுகாந்தி வகைக்கு ஒரு பிடி ஒரு லிட்டர் நீரில் போட்டு 8 இல் ஒன்றாய் காய்ச்சி ( தூதுவேளைக் குடிநீர் ) ஒரு மணிக்கு, ஒரு முறை 5 மி.லி முதல் 10 மி.லி வரை கொடுத்து வரக் கப வாதச் சுரம் (நிமோனியா ) சன்னிவாதச் சுரம் (டைபாய்டு) குறையும்.
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment