- Get link
- X
- Other Apps
ஆஸ்துமா மருத்துவகுணங்கள்
Read English
ஆஸ்துமாவும் அலர்ஜி மாதிரி தான், காற்றில் வரும் தூசு, பூவின் மகரந்ததூள் மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை இதனுடைய ரோமம், ஆகியவற்றால் வரும். புகை பிடிப்பதாலும், வாசனை திரவியங்கள் பயன் படுத்துவதாலும் ஆஸ்துமா வரும். இந்த ஒவ்வாமை ஏற்பட்டால் இரும்பல் தொடர்ந்து வரும், இரும்பலின் போது ஒரு வகையான சவுண்ட் வரும்.
தீர்வு
தூதுவேளை 100 கி, முசுமுசுக்கை கீரை 100 கி இரண்டும் எடுத்துக்கொண்டு அரைத்த பவுடரை தேனில் கலந்து சிறு உருண்டை செய்து தினமும் காலையில் சாப்பிடவதற்கு முன்பு சாப்பிட வேண்டும்.
இதனை சாப்பிடுவதன் மூலம் தொண்டையில் உள்ள கரகரப்பு சளி வெளிய வரும்.
உத்தாமணி இலையை வெயிலில் உனற்றி அரைத்து பவுடர் செய்துக்கொண்டு தேனில் கலந்து உருண்டை செய்து தினமும் காலையில் சாப்பிடவதற்கு முன்பு சாப்பிட வேண்டும்.
திப்பிலி, வெள்ளை வெற்றிலை இரண்டும் எடுத்துக்கொண்டு வெயிலில் உனற்றி அரைத்து பவுடர் செய்து தினமும் காலையில் சாப்பிடவதற்கு முன்பு சாப்பிட வேண்டும்.
கோரக்கிழங்கு, கடுக்காய், இந்துஉப்பு இவைகளை சமமாக எடுத்துக்கொண்டு அரைத்து பவுடர் செய்து தினமும் காலையில் சாப்பிடவதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
ஆடாதோடை இலை, சீந்தில்கொடி இவை இரண்டும் எடுத்துக்கொண்டு நெய்யில் வதக்கி நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் , பூச்சுக்கள் சாகும்.
தும்பை, துளசி இதை இரண்டும் சம அளவில் எடுத்து அரைத்து பவுடர் செய்து தேனில் கலந்து சாப்பிடவும்.
சாப்பிடக்கூடாதவை
ஐஸ்கிரீம், சாக்லட், கத்தரிக்காய் , குளிர்பானம் , வாழைபழம், திரட்சை, எலுமிச்ச்சை.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment