- Get link
- X
- Other Apps
ஜவ்வாது மலை
Read English
Watch Video
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலைக்கு செல்ல நான்கு வழிகள் உள்ளன, வேலூரிலிருந்து ஒடுக்கத்தூருக்கு சென்று அங்கிருந்தும் ஜவ்வாதுமலை செல்லலாம், போளூர் சென்று அங்கிருந்தும் ஜவ்வாதுமலை செல்லலாம், அமிர்தி சென்று அங்கிருந்தும் ஜவ்வாதுமலை செல்லலாம். நான்காவதாக நாகநதியிலிருந்து, அதாவது வேலூரிலிருந்து 25 கி. மீட்டர் தொலைவில் அமிர்தி செல்லும் வழியில் நாகநதி என்ற கிராமம் உள்ளது, இந்த கிராமத்திலிருந்தும் ஜவ்வாதுமலைக்கு செல்லலாம் இந்த வழியாக செல்லும்போது சற்று கவனமாக செல்லவேண்டும்.
வழி :
நாகநதியிலிருந்து ஜவ்வாது மலைக்கு செல்லும் வழியானது கரடு முரடான பாதையாகும், நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கு வழி இருந்தாலும் பாதை மண் சாலையாக உள்ளது .
கல்லும் முள்ளும் கலந்த பாதையில் சற்று கவனமாக செல்லவேண்டும் .
மேலும் இந்த வழியில் செல்ல 9 காட்டாற்றை கடந்து செல்லவேண்டும் . மழைக்காலங்களில் இப்பாதையில் செல்வது மிகவும் ஆபத்து.
சுற்றி இயற்கை எழில் மிகுந்த அடர்ந்த வணப்பகுதியில் செல்லவேண்டும் . இந்த காட்டில் நெல்லி, பணை, ஆலமரம், அரச மரம், கலாமரம், இலந்தைமரம், நாவல் மரம், புளிய மரம் என பல மரங்கள் காணப்படுகிறது. 6 வது ஆற்றை கடந்ததும் தஞ்சியம்மன் என்ற கோவில் உள்ளது . இங்கு இந்த வழியாக வந்து செல்பவர்கள் மட்டும் அல்லாமல் வேலூரில் இருந்தும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் வந்து வழிபாடு செய்கிறார்கள். எட்டாவது ஆற்றை கடந்தவுடன் ஒரு குளம் உள்ளது, இந்த குளத்திலிருந்து கோவில் வழிபாட்டிற்க்கான தண்ணீர் எடுத்துக்கொள்ளப்படுகிறது, அது மட்டுமல்லாமல் காட்டில் உள்ள ஜீவராசிகளின் தண்ணீர் தேவைக்கும் இந்த குளம் முக்கியமாக இருக்கிறது .
கடைசி ஆற்றைக் கடந்தவுடன் மற்றோரு கோவில் வைத்திருக்கிறார்கள். இதை பிள்ளையார்கோவில் என்கிறார்கள் , முக்கியமான விஷயம் என்னவென்றால் இங்கு உள்ள பிள்ளையார் கோவிலிலும், தஞ்சியம்மன் கோவிலிலும் எந்த ஒரு சிலையும் இல்லை. கல்லை வைத்தே வணங்குகிறார்கள். தஞ்சியம்மன் கோவிலின் பின்புறம் மட்டும் குதிரை, யானை, ஆடு, மாடு, என பல உருவத்தில் சிலை வைத்து கன்னிக்கோவிலாக வழிபாடு செய்கிறார்கள்.
நாகநதியிலிருந்து 7 கிலோமீட்டர் தூரம் உள்ள வனப்பகுயில், 9 ஆற்றை கடந்து வந்தவுடன் மலையடி வாரத்தில் தெள்ளை என்ற ஊர் வருகிறது .
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment